வேலையில்லா பட்டதாரிகளை ஆசிரிய சேவையில் இணைத்து நாட்டின் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மின்னேரிய தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமநிலையான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இதேவேளை, நாட்டின் அபிவிருத்தியை பற்றி சிந்திக்கும் போது தனிப்பட்டவர்களின் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது எனவும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
0 Comments