சிங்கள தொலைக்காட்சியான “தெரன”வின் சொற்பிரயோகம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் “ஒபேரா” இசைப்பாடகி கிஷானி ஜெயசிங்க கடந்த சுதந்திர தினத்தன்று புத்தரின் பெருமையை உணர்த்தும் “தன்னு புதுங்கே” என்ற சிங்கள பாடல் ஒன்றை சீன நளினத்தில் ஆடலுடன் பாடியுள்ளார்.
இதனை தெரன தொலைக்காட்சி தமது செய்தியறிக்கையில் “பெல்லி(பிட்ச்) “பெண்நாய்” போன்று குறித்த பெண் சத்தமிட்டு பாடினார் (பெல்லியக் வாகே கேகான்னவா) என குறிப்பிட்டிருந்தது.
இதனை வன்மையாக கண்டித்துள்ள பிரதமர், குறித்த ஊடகம் பெண்களை கேவலப்படுத்தும் வகையில் இந்த சொல்லை பயன்படுத்தியமையானது, மோசமானது என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், தொலைத்தொடர்புகள் ஒழுங்கு விதிகளுக்கு மாறான பொறுப்பற்ற செயல் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பதுளையில் வைத்து நேற்று விசேட உரையொன்றை ஆற்றிய பிரதமர், வானொலிக்கு அல்லது தொலைக்காட்சிக்கு பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் சொற்பிரயோகங்களை பயன்படுத்துவதற்கு யார் உரிமை தந்தது என கேள்வி எழுப்பினார்.
0 Comments