பல வண்ணங்களில் கிடைக்கும் குடைமிளகாயை சமைத்து சாப்பிட்டால் அற்புதமான நன்மைகள் கிடைக்கும்.
100 கிராம் குடை மிளகாயில் உள்ள சத்துக்கள்
புரோட்டின் - 0.99 கிராம், சக்தி - 31 கலோரி, சோடியம் - 4 மி.கிராம், கொழுப்பு - 0.3 மி.கிராம், தாதுச்சத்து - 6.02 மி.கிராம், பொட்டாசியம் - 211 மி.கிராம், மெக்னீசியம் - 12 மி.கிராம், விட்டமின் சி - 127.7 மி.கிராம், கால்சியம் - 7 மி.கிராம், இரும்பு - 0.43 மி.கிராம்.
மருத்துவ பயன்கள்
1. குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் விட்டமின் ஏ வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கலாம்.
2. குடைமிளகாயில் உள்ள கேப்சைனின் என்னும் உட்பொருள், புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும்.
3. தற்போது புற்றுநோய்கள் மக்களை அமைதியாக இருந்து தாக்குவதால், இவற்றை உணவில் அடிக்கடி சேர்த்து வர, புற்றுநோய் தாக்காமல் தடுக்கலாம்.
4. குடைமிளகாய் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கலோரிகளை அதிக அளவில் எரிக்க உதவும். இப்படி கலோரிகள் அதிகமாக கரைந்தால், உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.
5. குடைமிளகாய் வயிற்றில் உணவைச் செரிக்க உதவும் அமிலத்தின் அளவை அதிகரித்து, செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும். ஆகவே செரிமான பிரச்சனை இருந்தால், இதனை உணவில் அடிக்கடி சேர்த்து வாருங்கள்.
6. தலைமுடி பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், குடைமிளகாயை உட்கொண்டு வருவதோடு, அதன் சாற்றினைப் பயன்படுத்துவதும் நல்லது. இதனால் தலைமுடி உதிர்வது தடுக்கப்படுவதோடு, தலைமுடியின் அடர்த்தியும் பராமரிக்கப்படும். ஆனால் இது எரிச்சலை ஏற்படுத்தும் தன்மை கொண்டதால், இதனைப் பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
7. குடைமிளகாயில் உள்ள கேயீன் என்னும் வேதிப்பொருள், பலவிதமான உடம்பு வலிகளைக் குறைக்கிறது.


0 Comments