Subscribe Us

கையடக்கத் தொலைபேசிக் கட்டணம் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசிக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் செக்கனுக்கு 0.03 சத அதிகரிப்புடன் நிமிடத்துக்கு 1 ரூபா 80 சதமாக கட்டணத்தை அதிகரித்துள்ளது.

சில தொலைபேசி இணைப்பு நிறுவனங்கள் 1 ரூபா 50 சதமாக ஒரு நிமிடத்துக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளது.

இந்த அதிகரிப்புடன் ஒரு தொலைபேசி பாவனையாளன் பல்வேறு வரிகளுடன் சேர்த்து 1 ரூபா 94 சதத்தை கட்டணமாக செலுத்த வேண்டும்.

இருப்பினும், ஏற்கனவே காணப்பட்ட பக்கேஜ் இணைப்புக்கான கட்டணம் இதுவரை அதிகரிக்கப்படவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், ஒரே தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்குள்ளும், வெளியார் தொலைபேசி இணைப்பு நிறுவனங்களுக்கிடையிலும் பேசும் கட்டணம் சமப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments