Subscribe Us

header ads

கற்பிட்டியில் மீனவர்கள் மீது தாக்குதல்

கற்பிட்டி – பத்தலகுண்டு கடற்பரப்பில் அடையாளம் தெரியாத சிலர் மேற்கொண்ட தாக்குதலால் 4 மீனவர்கள் காயமடைந்துள்ளனர்.
 
அத்துடன் 11 மீன்பிடி படகுகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
 
தடை செய்யப்பட்ட மீன்பிடி சாதனங்களை பயன்படுத்தும் நபர்கள் சிலரே இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல்களுக்கு உள்ளான படகுகளில் ஒரு படகிற்கு தலா 25 இலட்சம் ரூபா பெறுமதியான சேதம் ஏற்பட்டுள்ளதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த மீன்பிடி படகுகளின் மீதான தாக்குதல் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் ஒருவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பில் காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments