கைத்தொழில்,
வர்த்தக அமைச்சும், சர்வதேச அபிவிருத்தி மூலோபாய அமைச்சும் இணைந்து நடாத்திய,
காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் அலங்காரக் கண்காட்சியின் இறுதி நாள் விருது
வழங்கும் நிகழ்வு நேற்று (07) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு
மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில்
கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு,கண்காட்சியில்
பங்குபற்றிய காலணிகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியாளர்களுக்கிடையில்
இடம்பெற்ற போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான விருதுகளையும் வழங்கி வைத்தார்.
இங்கு உரையாற்றிய
அமைச்சர்
இவர்களின்
வினைத்திறனை ஊக்குவிக்கபல்வேறு உதவிகளைத் தொடர்ந்தும் அரசாங்கம் வழங்குமென
உறுதியளித்ததுடன், சர்வதேச மற்றும் உள்நாட்டுப் பாதணி
உற்பத்தியாளர்களுக்கு தமது நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
இந்த நிகழ்வில்
ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி யூஸுப் K.மரைக்கார், ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் பணிப்பாளர்
நாயகம் ஹிமாலி உட்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.
0 Comments