இன்று காலையில் ஒரு கிளையன்ட். மணமுடித்து 03 நாள்கள் தான் கடந்திருந்தன. கலகலப்பாக பேசாமல் வெறித்து பார்க்கிறார் என்று கொண்டு வந்திருந்தார்கள். மேனியாவா என்று ஆராய்ந்து பார்த்தால் அசஸ்மென்ட் ரிப்போர்ட் மைல்ட் ட்ரோமா என்றது. பின்னர் கொஞ்சம் ஹிப்னோசிஸ், கொஞ்சம் டிலீசன், நிறைய சஜஸன் என பேக் டு நோர்மல் மூட்டிற்கு ஒன்றரை மணிநேரத்தினுள் கொண்டு வந்து விட்டேன். அல்ஹம்துலில்லாஹ்.
திருமணம் முடித்த இரவு பத்து மணியளவில் அவளது மணவாளனை அவனது ப்ரென்ட்ஸ் கடத்தி கொண்டு சென்று கோல் பேஸில் வைத்திருந்து பின்னர் காரில் சுத்து சுத்து என்று சுற்றி அதிகாலையில் கூழ் முட்டையடித்து வீட்டு வாசலில் இறக்கி சென்றுள்ளனர். உள்ளே வந்தவன் வாயில் மெல்லிய அட்ககோல் வாசம்.
இது தான் அந்த பெண்ணை அப்சட்டாக்கியது. நிகாஹ் மஸ்ஜித்தில் பிரபல உலமாவின் பயானுடன் நிகழ்ந்து சில மணி நேரங்களில் கணவன் கடத்தப்படுகிறான். ஆசையுடன் காத்திருந்த அவள் முதல் நாள் கனவுகள் சிதைக்கப்படுகின்றன நட்பு என்ற பெயரில். முஸ்லிம் சமூகத்தில் அதுவும் கொஞ்சம் கையில் காசுள்ள குடும்பங்களில் இது திருமணத்தின் கட்டாயமான சம்பிரதாயமாகி விட்டது.
குடும்பத்தின் பெரியவர்களும் சில கோபமான முனங்கள்களுடன் அதனை மெல்ல அனுமதிக்கின்றனர். அடுத்த நாள் அவனிற்கு நடந்த இரவு சமாச்சாரங்களை ஆவலுடன் கேட்டு ரசிக்கின்றனர். முஸ்லிம் உம்மாவின் அவலட்சணமான முகங்களில் இதுவும் ஒன்று.
நிகாஹ் இஸ்லாத்தின் கன்னியமான நிகழ்வுகளில் ஒன்று. தம்பதியினரின் இணைவில் மலாயிக்கத்துமாரின் ஸஃபாத்துகள் நிறைந்த தினம். அவை பதுவாக்களாக மாற்றப்படும் தினமும் அதுவாகத்தான் இருக்கிறது. இதில் எந்த த்ரில்லிங்கும் இல்லை. கல்ச்சர் என்ற பெயரில் நடக்கும் ஆணாதிக்க வக்கிரம் மட்டுமே எஞ்சி நிற்கிறது.
நிகாஹும் அதனோடினைந்த தாம்பத்திய இணைவும் இஸ்லாத்தின் அழகான கொன்செப்ட். அதனை காட்டுமிராண்டித்தனமாக கேவலப்படுத்தும் செயலும் முஸ்லிம்களாலேயே நிகழ்த்தப்படுகிறது.
முன்பும் ஒரு பெண்ணின் பிரச்சனைக்கு அவளை அறிதுயில் நிலையில் வைத்து பிரிகிரேசன் முறையில் வயதை நான் குறைத்து கொண்டு சென்ற போது அவளது பிரச்சனைக்கு அடிப்படை முதலிரவில் கணவன் காணாமல் போனதும் பின் திரும்பி வந்ததும் தான் காரணமாக இருந்தது. அப்போது அதனை ஒரு சம்பவமாக எண்ணி கவுன்சிலிங் செய்தேன். இப்போது அது மீண்டும் ட்ரோமாவாக வந்திருக்கிறது இன்னொரு பெண்ணிற்கு.
இதற்கு மாப்பிள்ளையை கடத்திய நண்பர்கள் மட்டுமல்ல, அதனை வேடிக்கை பார்த்த கண்கள், மௌனமாக அனுமதித்த முகங்கள், பின்னர் அதனை ஒரு பெரிய கிட்னேப் த்ரில்லராக ரசித்த உள்ளங்கள் என நிறையப் பேர் யவ்முல் கியாமாவில் டெபினீட்டாக பதில் சொல்லியே ஆக வேண்டும்.
_னசார இஸ்லாத்தை வெளியில் இருந்து சிதைக்கிறான். நம்மவர்களோ உள்ளேயிருந்து செய்கிறார்கள் அதனை. அவ்வளவுதான் டிபரன்ஸ்...!!
-Roomy Abdul Azeez-


0 Comments