புத்தளம் மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவரும் விளையட்டு த் துறை பிரதி அமைச்சருமான கௌரவ ஹரீஸ் அவர்கள் விஜயத்தின் ஒரு பகுதியாக புத்தளம் , கல்பிட்டி , முந்தல் , வணதவில்லுவ , சிலாபம் மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களில் உள்ள விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகளுடன் அவர்களுடைய தேவைப்பாடுகள் , எதிர் நோக்கும் சவால்கள் பற்றி புது நூலக கேட்போர் கூடத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் புத்தளம் சாஹிரா கல்லூரிக்கும் விஜயம் செய்து கல்லூரி மைதானத்தையும் பார்வைட்டார் .
இன் நிகழ்வுகளில் வடமேல்மாகாண சபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் கௌரவ நியாஸ் மற்றும் புத்தள மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் அமைப்பாளர்களும் கலந்து கொண்டனர் .
-பரீட் முஹம்மத்-
-பரீட் முஹம்மத்-






0 Comments