Subscribe Us

பெப்ரவரி 30ம் திகதிக்கு நீதிமன்றத்திற்கு அழைப்பு விடுத்த காவற்துறை அதிகாரி (படங்கள் இணைப்பு)

வீதி விதிகளை மீறிய சாரதியொருவருக்கு தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் வழங்கிய  போக்குவரத்து பிரிவு காவற்துறை அதிகாரியொருவர் அதன் நீதிமன்ற திகதியை பெப்ரவரி 30 என குறிப்பிட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இவ்வருடத்தின் பெப்ரவரி மாதம் 29ம் திகதியுடன் முடிவடைவது குறிப்பிடத்தக்கது.

கடந்த 14ம் திகதி தம்புள்ளை - கலேவெல பகுதியில் வீதி விதிகளை மீறி வாகனத்தை செலுத்திய சாரதியொருவரின் சாரதி அனுமதி பத்திரத்திற்கு பதிலாக தற்காலிப சாரதி அனுமதி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த பத்திரம் 14 நாட்கள் மாத்திரமே செல்லுபடியாகும் என தெரிவித்துள்ள குறித்த காவற்துறை அதிகாரி , குறித்த காலப்பகுதியில் தண்டப்பணத்தை செழுத்த தவறும் பட்சத்தில் பெப்ரவரி  30 ம் திகதி நீதி மன்றத்தில் முன்னிலையாகுமாறு குறித்த காவற்துறை அதிகாரியால் சாரதிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , இது தொடர்பாக குறித்த சாரதி காவற்துறையினருக்கு தௌிவு படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புகைப்படம் முகப்புத்தக்தில் பதிவேற்றப்பட்டிருந்தது.

படம் கீழே..



Post a Comment

0 Comments