போரினை முடிவுக்குக் கொண்டு வந்ததே தாம் செய்த மிகப்பெரிய தவறாகும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குருநாகல் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
போரினை முடிவுக்குக் கொண்டு வந்திருக்காவிட்டால் இன்று யோசித சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கப்பட மாட்டார், நான் உள்ளிட்ட எனது குடும்ப உறுப்பினர்களுக்கு விசாரணைகள் என்ற பெயரில் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்காது.
தற்போது ஆளும் கட்சியில் இணைந்து கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரர்கள், என்னை ஒருபோதும் அறிந்திராதவர்கள் போல பேசுகின்றார்கள்.
எனது அமைச்சரவையில் நான் சொன்ன அனைத்தையும் ஆமோதித்து கை உயர்த்தியவர்கள்,இன்று என்னை விமர்சனம் செய்வதோடு , எனக்கு எதிராக கருத்துக்களையும் முன்வைக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments