Subscribe Us

header ads

சிங்க லே அமைப்புக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

சிங்க லே தேசிய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாகன ஊர்வலம் மற்றும் கூட்டம் என்பனவற்றுக்கு நீதிமன்றத்தில் பொலிஸார் இடைக்காலத் தடை உத்தரவொன்றைப் பெற்றுள்ளனர்.

இந்த தடை உத்தரவை பதுளை நீதிமன்ற மேலதிக நீதவான் ஆர்.எம்.பி.சீ. ரத்நாயக்க பிறப்பித்துள்ளார்.

பண்டாரவளையிலிருந்து பதுளை நோக்கி வாகனப் பேரணியில் வந்து நேற்று மாலை முதியங்கன ரஜமகா விகாரையில் கூட்டமொன்றை நடாத்த சிங்க லே அமைப்பு தயாராகி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலை வைத்து பொலிஸார் தடை உத்தரவைப் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

Post a Comment

0 Comments