தெற்கு அதிவேக வீதியின் பின்னதுவ நுழைவாயில் அருகில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன.
நேற்று மாலை (15) இடம்பெற்ற இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.
பின்னர் அவர்கள் காலி – கராபிடிய போதன மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் ஆண்கள் இரண்டு பேரும், பெண்கள் 3 பேரும் உள்ளடங்குகின்றனர்.
சிற்றூர்தி மூன்று, பேரூந்தொன்று மற்றும் ஜீப் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளதாக என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீதியின் குறுக்கே சென்ற நீர் உடும்பொன்றை காப்பற்றுவதற்காக காலி நோக்கி சென்ற சிற்றூர்தி ஒன்று மேற்கொண்ட முயற்சியின் போது பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளமை தெரியவந்துள்ளது.
0 Comments