ஐஸாக் நியூற்றனே
ஐயா பெரியவரே
தோட்டத்துக்கு வந்தமா
தூங்கினமா போனமா
என்று இல்லாமல்
என்ன தேவைக்கைய்யா
வித்தியாசமா யோசித்து
விசையை ஆராய்ந்தாய்.
பரீட்சைப் பேப்பர்ல
பாடாப் படுத்திறான்யா
ஏலுமெண்டா ஐயா
எழும்பி வந்து சொல்லு
புவி ஈர்ப்பு இல்லையென்று
புண்ணியமாய்ப் போகும்.
செத்துப் போன ராசாக்களே
செய்த வேலை சரிதானா?
ஆண்டமா செத்தமா
அப்படி இல்லாமல்
ஏழெட்டுக் கல்யாணம்
எதுக்கையா முடிச்சீங்க?
எல்லார்ட பெயரையும்
எங்களிடம் கேட்டு
வாட்டி வதைக்காங்கையா
வந்து பாருங்கையா.
அல்பிரட் மார்ஷல்
ஐயா நீங்கதானே
கேள்விக்கும் நிரம்பலுக்கும்
கிராப் கீறச் சொன்னீங்க.
கீரை விற்கிறவனும்
கேட்டு வாங்குபவனும்
பேப்பர்ல கீறிப் பார்த்தா
பிஸ்னஸ் பன்றான்.
சும்மா சொல்ல வேண்டியத
சுற்றிச் சுற்றிச் சொல்லி
பொருளியலை எழுதிட்டுப்
போய்ச் சேர்ந்திட்டீங்க.
பேப்பர் எடுக்கிறவன்
பிராணன வாங்கிறான்யா
விஞ்ஞான வாத்தியார்
கொஞச நேரம் சொல்வார்.
மந்தியில் இருந்துதான்
மனிதன் வந்தானென்பார்.
அப்புறம் சமய பாட
ஆசிரியர் வருவார்
அதற்கு மாற்றமாய்
அறிவுரை செய்வார்.
இப்படி மாறி மாறி
எங்களுக்குச் சொன்னால்
எப்படியும் குழம்பி
எங்க தலை சுற்றும்.
இருந்தும் என்ன செய்ய
இதெல்லாம் படிச்சாத்தான்
எக்ஸாம் பாஸ் பண்ண
ஏலும் என்பதனால்
பொறுமையாய்ப் படிக்கின்றோம்
பொங்கிப் பயனில்லை...
-MOHAMED NIZOUS-


0 Comments