தொழிலுக்காகக் கடலுக்குச் சென்ற சிலாபம் பிரதேச மீனவர்களால் பிடித்து கரைக்குக் கொண்டுவரப்பட்ட “வாலக்கடியா” எனும் கடல் உயிரினம் (கடல் பாம்பு) கடித்து காயத்திற்குள்ளான நபர் ஒருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிலாபம் வட்டக்களி பிரதேசத்தில் வசிக்கும் 33 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான நபரொருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவராவார்.
இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த காயத்திற்குள்ளான நபர் கூறும்போது, நான் மீனவர்கள் பிடித்துவரும் மீன்களை வகை பிரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றேன்.
வழமை போன்று நான் மீன்களை வகை பிரிக்கும் இடத்திற்குச் சென்ற போது மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற படகு ஒன்று காலை 10 மணியளவில் கரைக்கு வந்தது.
நான் அதனுள்ளிருந்த மீன்களை வகை பிரித்துக் கொண்டிருந்த போது புலித்தோல் போன்ற தோற்றத்தில் மீன் ஒன்று இருந்ததைக் கண்டேன்.
அந்த மீன் தூண்டிலை விழுங்கியிருந்தது. எனவே, நான் அதன் வாயில் இருந்த தூண்டிலை எடுக்க முயன்ற வேளை அது பாய்ந்து என்னைக் கடித்தது.
உடனே, நான் தடி ஒன்றை எடுத்து அதனை அடித்த போது அது என்னைக் கடித்ததால் என் உடம்பில் வலி ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் ” என்றார்.
0 Comments