அன்று நான் ஜப்பானில் இருந்து கொழும்பு நோக்கி நடு இரவில் விமான நிலையத்தை வந்தடைந்தேன், விமானத்திலிரிந்து இறங்கி குடியகல்வு நுளைவாயினை தாண்டி சுங்க வரி பரிசோதகரிடம் அகப்பட்டுக்கொண்டேன்,
காரணம் கை பை சற்று கணம் உடையதால். சுங்க வரி பரிசோதகர் எனது பைகளை பரிசீலித்து விட்டு விட்டு, இலஞ்சம் கேட்டார். எனக்கு சுங்க அதிகாரிகள் சில நபர்களை தெரியும் என்பதால், அவர் கேட்ட பணத்தை கொடுக்காமல் சற்றும் தாமதிக்காமல் வெளியேறினேன்.
கண்டி நோக்கி எனது இல்லறத்தை வந்தடைந்தேன். காலையில் எனது பைகளை காரிலிரிந்து இறக்க முற்பட்டதும் கண்டு கொண்டேன் எனது முக்கியமான ஒரு பையை தவற விட்டேன் என்று.
உடனே விமான நிலையத்தை தொடர்பு கொண்டு பை தொடர்பாக வினவினேன், அவர்கள் விமான நிலையத்திற்கு வந்து தொலைந்து போன பைகளை வைக்குமிடத்தில் பார்க்க சொன்னார்கள்.
நானும் தாமதிக்காமல் கண்டியிலிரிந்து கட்டுநாயக்க நோக்கி புறப்பட்டேன். வந்தடைந்து புகார் தெரிவித்தேன், காணாமல் போன பைகளை பார்க்குமிடத்திட்கு சென்று எனது பையை தேடினனேன், கிடைக்கவில்லை.
அதில் எனது ( Laptop,iPhone,iPod,iPad,DSLR Camera ) போன்ற RS. 500,000 கும் அதிகமான பொருட்கள் இருந்தன.
சற்றும் தளராமல், மேல் அதிகாரியிடம் சென்று நடந்ததை வினவி, இரகசிய கண்காணிப்பு கெமரா மூலம் பரிசோதிக்க அனுமதி கேட்டேன். அனுமதி அளித்ததும், பாதுகாப்பு அறைக்கு சென்று கெமரா மூலம் நடந்தவற்றை பார்த்தேன்.
நான் சென்ற எல்லா இடத்தையும் கெமரா படம் பிடிக்க தவரவில்லை. விமான நிலையத்தில் எல்லா இடத்திலும் கண்காணிப்பு கெமரா இருந்த போதிலும் சுங்கவரி பரிசோதனை செய்யும் இடத்தில் மட்டும் இருக்கவில்லை.
அங்கிருந்த கண்காணிப்பு கெமராக்களின் தொகுப்புக்களை பார்வை இடுபவர் என்னிடம் கூறியதாவது, “சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த இடத்தில் நாம்cctv கேமராவை வைக்க முடியாதுள்ளது.,” என்றதும் எனது முயற்சிகள் பயனளிக்காததால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினேன்.
இனிவரும் காலங்களிலும் இவ்வாறான தவறுகள் நடை பெறாமல் முன் எச்சரிக்கையாக இருக்கவே இக்கோவையை பதிவு செய்கிறேன்.
எனது ஆதங்கம் என்னவென்றால் நான் சுங்க வரி பரிசோதகரின் அறைக்கு சென்றபோது எனது கையில் இருந்த பை வெளியில் வந்த போது இருக்காதது CCTV யில் பதிவாகி இருந்ததே..
0 Comments