காட்டு யானை மீது மோதி புரண்ட லொறி ஒன்றுடன், வான் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை 1.15 மணியளவில் புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான அருணாநந்தன் எட்வட் ரமேஸ்குமார் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியாவில் இருந்து புத்தளம் நோக்கி பயணித்த லொறி ஒன்று 12.40 மணியளவில் யானை மீது மோதி புரண்டுள்ளது.
பின்னர் 1.40 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து கட்டுநாயக்க நோக்கி பயணித்த வான், புரண்டு கிடந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கருகலஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
0 Comments