பல இன்னல்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் தம்மை வளர்த்த பெற்றோரை பிள்ளைகள் வீதியில் விட்டுச் செல்லும் சம்பவங்கள் இலங்கையில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
ஹக்மன – கரதொட்டவில் வயதான தனது தந்தையை மகளொருவர் வீதியில் கைவிட்டுச் சென்றுள்ளார்.
அவரின் மனைவி 33 வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
அப்போது அவரது பிள்ளையின் வயது 12. எனினும் தனது மகளை பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் வளர்த்துள்ளார் அத் தந்தை.
ஆனால் சொத்து மற்றும் வீட்டை விற்று அம் மகள் தந்தையை வீதியில் விட்டுச் சென்றுள்ளார்.
தற்போது அம்முதியவர் பஸ் தரிப்பிடத்தில் வசித்து வருகின்றார்.
தனக்கு கை, கால்கள் முடியாமையால் தன்னை முதியோர் இல்லத்திலும் சேர்த்துக்கொள்வதில்லையென தெரிவிக்கின்றார் அவர்.
முடிந்தால் தன்னை எதாவது முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும்படியும் கேட்டுக்கொள்கின்றார் அவர்.


0 Comments