Subscribe Us

header ads

ஹிஜாப் பற்றி ஒரு சகோதரியின், உள்ளக் குமுறல்களும் ஆலோசனைகளும்..!!


அன்பிற்கினிய அறிவையரே!

எம்மை #அறிவையர் - #அறிவுள்ளவர்கள் என அழைக்கும் இந்த சமூகத்தில் , நாம் அறிவுள்ள பெண்களாக இருக்கின்றோமா? சற்று சிந்தித்துப் பாருங்கள்.

*தனக்கு நன்மை தருவது எது? தீமை விளைவிப்பது எது? என்பதை உணர்ந்து அதற்கு தகுந்தாற்போல் நடந்துகொள்பவர்களே அறிவுள்ளவர்கள் என்பவர்கள்.

உங்களில் எத்தனை பேர் அறிவையர் என சுயபரிசோதனை செய்து பாருங்களேன் !

எமது சில சகோதரிகளைப் பார்க்கும் போது மனதிற்கு மிக வேதனையாகவும், பெண்களுக்கே அவமானமாகவும் இருக்கின்றன.

அள்ளாஹு ஸுப்ஹானஹூவதஆலா பெண்கள் தங்கள் அவ்ரத்தை மறைக்குமாறு கட்டளையிட்டு இருக்கின்றான். முகம், மணிக்கட்டுடனான இரு கைகள் தவிர்ந்த ஏனைய பாகங்களை மறைக்க சொன்னதன்படி மறைக்கின்றார்கள். ஆனால் எப்படி? உடலின் அங்க அமைப்புகள் அப்பட்டமாய் தெரியும்படியான உடைகளை ( அபாயா, சல்வார் , ஸ்கர்ட் & பிளவுஸ், ஜீன்ஸ் & டொப் ) உடுத்தி, தலையை ஒரு சிறு துணித்துண்டால் மறைக்கின்றார்கள்.வீட்டில் தன் கணவரின் முன்னால் கூட காட்டிடாத அளவுக்கு அலங்காரங்கள். அந்த தலையை மறைக்க படும் பாடு!

மறுமையில் அள்ளாஹ்விடம் அந்த தலையே சாட்சி சொல்லும். கடைகளிலுள்ள அத்தனை அலங்காரப்பின்களும் அந்த தலையின் மீதுதான்.இயல்பாய் அசைந்துகொண்டிருந்த தலை- இப்போது "ரொபோ" போன்று அசைக்க வேண்டிய பரிதாபம். 

இது தேவைதானா?

தப்பித்தவறியாவது மார்புகளின் அளவுகள் மறைந்து விடக்கூடாது என்ற நல்லெண்ணம் மேலோங்க, மார்மீதும் தோள்மீதும் தொங்கும் அந்த தாவணியின் விளிம்புகளைக்கூட விட்டுவிடாது வாரிச்சுருட்டி கழுத்துக்குள் சொருகிவிடுவதை என்னவென்று வர்ணிப்பது?

24:31. இன்னும் தங்கள் முந்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக்கொள்ள வேண்டும்!

என அள்ளாஹ் நேரடியாகவே குர்ஆனில் கூறியிருக்கும் போது, அந்த மார்புகளை அப்படியே துள்ளியமாக தெரியும்படி காட்டித் திரியும் சகோதரிகளே ! சிந்திக்கமாட்டீர்களா?

வெட்கமும் , மானமுமுள்ள ஒரு பெண்ணுக்கே உங்களைப்பார்க்கும் போது உடல்புல்லரித்துப்போகுமே!

உங்களுக்கு புல்லரிக்க வில்லையா?

வீதியில் செல்லும் எத்தனை ஆண்களை விபச்சாரத்திற்கு தூண்டுகிறீர்கள்?

இது உங்களுடைய புத்தியில் ஏறவில்லையா?

என்ன பார்க்கின்றீர்கள்?

"கண்களும் விபச்சாரம் செய்கின்றன" என்பது நபிமொழி.

நீங்கள் பாவியாவதோடு எத்தனை ஆண்களைப் பாவியாக்கின்றீரகள்.

உங்களப் பார்த்து, ரசித்து, உங்களை அடையக்கூட நினைக்கலாம் அந்த உள்ளங்களுக்கு.அள்ளாஹ் பாதுகாப்பானாக!

சாதரண உடையில் இருக்கும் பாதுகாப்பு கூட நீங்கள் உடுக்கும் இந்த ஹிஜாப் உடையில் இல்லை என்பது கூடவா உங்களுக்குத் தெரியவில்லை?

மன இச்சைப்படி வாழாமல், மண்டைக்குள் இருக்கும் மூளையை கொஞ்சம் இயங்கவிட்டு, அறிவுக்கும் வேலை கொடுங்கள். Please!

இது நீங்கள் உங்கள் கணவனுக்கு/ வருங்கால கணவனுக்கு செய்யும் மாபெரும் துரோகமில்லையா?

ஏன் சகோதரிகளே இப்படி இருக்கின்றீர்கள் ?

நீங்கள் உங்கள் கணவனோடு / வருங்கால கணவனோடு பாசமில்லையா?

அவர்களுக்குரிய உடமையை, உரிமையை ஏன் இப்படி அந்நியருக்கு பகிர்ந்தளிக்கின்றீர்கள்?

அவர்களுக்கு மட்டுமே சொந்தமான பொக்கிஷத்தை ஏன் இப்படி ஏலத்தில் விடுகின்றீர்கள்?

தயவு செய்து புரிந்து நடந்துகொள்ளுங்கள். அள்ளாஹ்விற்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் கட்டளைப்படி மறைத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் ஆடைகளை அலங்காரங்கள் அற்றதாகவும், தளர்வாகவும், கனதியானதாகவும் அணிந்துகொள்ளுங்கள்.

எனதன்புச் சகோதரிகளே !

உங்கள் கற்பையும் பாதுகாத்து, உங்கள் கணவனின் கண்ணியத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!

இன்ஷாஅல்லாஹ் !

அள்ளாஹ் எம்மனைவரையும் மன்னித்து , எமக்கு நல்லறிவைத் தந்து, நல்லொழுக்கத்தைப் பேண அருள் புரிவானாக !

(எழுத்துக்கள் வரம்புமீறப் பட்டிருந்தால் அள்ளாஹ்விற்காக என்னை மன்னித்துவிடுங்கள்)

Post a Comment

0 Comments