தேர்தல் காலத்தில் ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய விடயங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சர்வஜன வாக்கெடுப்பு அல்லது தேர்தல் ஒன்றின் போதான காலப்பகுதியில் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பின்பற்ற வேண்டிய நியதிகள் தொடர்பில் அறிவுறுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
2015.07.27 என்ற திகதியில் 1925/4 என்ற இலக்கத்தில் வர்த்தமானியில் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
19ஆம் திருத்தச் சட்டத்தின் 104(ஆ) 5 (ஆ) சரத்து மற்றும் உப சரத்துக்களின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு நாடாளுமன்றின் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதன்படி நாடாளுமன்றின் அனுமதியுடன் மீளவும் வர்த்தமானி அறிவித்தலை பிரசூரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


0 Comments