உங்கள் அழகான சருமத்தில் தினமும் குறைந்தது இரண்டு தடவையானது சவர்க்காரம் தேய்க்கிறீர்கள்.
நுரை வருகிறது. மணம் தருகிறது. என்று என்று சொல்லும் பலருக்கும் அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றோ தனது சருமத்திற்கு அது பொருத்தமானதுதானா என்றோ தெரிவதில்லை.
நுரை வருகிறது. மணம் தருகிறது. என்று என்று சொல்லும் பலருக்கும் அதில் என்னென்ன மூலப்பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கிறது என்றோ தனது சருமத்திற்கு அது பொருத்தமானதுதானா என்றோ தெரிவதில்லை.
சவர்க்காரத்தின் இரகசியங்களை தெரிந்துகொள்ளுங்கள்.
ஒருவகை உப்புதான் சவர்க்காரத்தின் மூலப் பொருள். அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும் தாவர கொழப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சவர்க்காரம் தயாராகிறது.
நிறத்திற்கான பொருளும் வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது.
நிறத்திற்கான பொருளும் வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது.
உங்கள் சருமத்திற்கு ஏற்ற சவர்க்காரத்தை தெரிவு செய்ய வேண்டும்.
அதாவது சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அதாவது சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மையும் அமிலத்தன்மையும் அதில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
கார , அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு 'ஜீலீ 5.5' என்ற கணக்கில் இருக்க வேண்டும். அவ்வாறு அமையாவிட்டால் சருமத்தின் 'ஜீ'லீ'அளவில் மாற்றம் ஏற்படும்.
அதனால் தோல் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம்.
அதனால் தோல் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம்.
எண்ணெய்ப் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை கலந்த சவர்க்காரம் நல்லது.
வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாளை, ஜோஜோபா எண்ணெய், விற்றமின் 'இ' (இயற்கை எண்ணெய்), அவகோடா ஆகியவற்றால் தயாரிக்கப்ட்ட சவர்க்காரம் சிறந்தது.
சவர்க்காரத்தின் அழகிய நிறங்களும் குறிப்பிட்ட சில இராசயன மூலப்பொருட்களை சார்ந்தே அமைகிறது.
T.F.M. (Total Fatty Matter) என்பது சவர்க்காரத்தின் தரத்தை குறிப்பிடுகிறது.
முதல் தர சவர்க்காரத்தின் என்பது 75 சதவீதத்திற்கு அதிகமான T.F.M. கொண்டதாகும்.
65 முதல் 75 சதவீதம் வரை T.F.M. இருந்தால் அதுநடுத்தரமானது.
சிலர் அறிமுகமாகும் அனைத்து சவர்க்காரங்களையும் பயன்படுத்திப் பார்ப்பார்கள். அந்தப் பழக்கத்தைப் தவிர்க்கவேண்டும்.
65 சதவீதத்திற்கும் குறைவான T.F.M. இருந்தால் அது தரம் குறைந்த சவர்க்காரம் எனப்படுகிறது.
எனவே சவர்க்காரம் வாங்கும் போது T.F.M. அளவினை பார்த்து வாங்குகள்.
எனவே சவர்க்காரம் வாங்கும் போது T.F.M. அளவினை பார்த்து வாங்குகள்.
வீரியம் நிறைந்த இராசயங்களான சோடியம் லாரில் சல்பேட் சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ரோக்ரன்ஸ் ஆகியவற்றால் தயாரிக்கப்ட்ட சவர்க்காரங்களை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.
பெரியவர்கள் சிலர் குழந்தைகளுக்கான பிரத்தியேக சவர்க்காரங்களை பயன்படுத்துகிறார்கள்.
அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்குத் தங்கிவிடும்.
அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்குத் தங்கிவிடும்.
சருமத் துளைகள் பிறந்த குழந்தைகளுக்கு இருக்காது. அதற்கு ஏற்றபடி வீரியம் குறைந்த பொருட்களை கொண்டே குழந்தைகளுக்கான சவர்க்காரம் தயாரிக்கப்படுகிறது.
பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும்.
அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி குழந்தைகளுக்கான சவர்க்காரங்களில் இல்லை. எனவே மூன்று வயதுக்கு மேல் அவ்வாறான சவர்க்காரங்களை பயன்படுத்த வேண்டாம்.

சவர்க்காரத்தின் பணி அழுக்கை நீக்குவது மட்டுமே. அழகாக்குவதோ அல்லது சிவப்பழகை வழங்கப்படுவதோ அல்ல.
எனவே விளம்பரங்களில் தோன்றும் நடிகைகளின் அழகைப் பார்த்து சவர்க்காரம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
எனவே விளம்பரங்களில் தோன்றும் நடிகைகளின் அழகைப் பார்த்து சவர்க்காரம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
மூலிகை சவர்க்காரம் என்று சொல்லப்பட்டாலும் அதிலும் இராசயன மூலப்பொருட்களை சேர்க்கத்தான் செய்வார்கள்.
ஒருநாள் ஒருமுறை மட்டுமே சவர்க்காரம் பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது.
அடிக்கடி முகத்தில் சவர்க்காரம் போட்டால் சருமம் வறண்டு போகும்.
லிக்வீட் என்ற சவர்க்கார வகை ஈரத்தன்மை அதிகம் கொண்டது. அதில் இராசயனத்தின் வீரியம் குறைவு.
சவர்க்காரத்தில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சவர்க்காரம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
முகப்பருவை தடுப்பதாக கூறி சிலர் மூலிகை சவர்க்காரத்தை பயன்படுத்துவார்கள்.
அவர்கள் அதை பயன்படுத்த முன்னால் அதில் என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அதன் விபரம் சவர்க்கார கவரில் இருக்கும்.
அவர்கள் அதை பயன்படுத்த முன்னால் அதில் என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்க வேண்டும். அதன் விபரம் சவர்க்கார கவரில் இருக்கும்.
வியர்வை நாற்றத்தால் அவதிப்படுபவர்களுக்கு லேவண்டர், சிட்ரஸ், லெமன் கிராஸ், ரோஜா ஆகியவற்றை கலந்து தயார் செய்யும் சவர்க்காரமே சிறந்தது.
0 Comments