Subscribe Us

header ads

'ஸிகா' காய்ச்சலுக்கு அஞ்சத் தேவையில்லை: சுகாதார அமைச்சு அறிவிப்பு

'ஸிகா' வைரஸ் காய்ச்சல் பற்றி பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஈட்ஸ் வகை நுளம்புகளால் இந்த நோய் பரவுகின்றது. தலைவலி, தசைப்பிடிப்பு, கால் வீக்கம், கண்களைச் சுற்றி வலி போன்ற நோய்க் குணங்கள் காணப்படும்.

இந்த குணங்குறிகள் 2 தொடக்கம் 7 நாட்களுக்கு நீடிக்கும். இவ்வாறான குணங்குறிகள் இருப்பின் சாதாரண வலி நிவாரணியான பெரசிட்டமோல் வில்லைகளை உட்கொள்வதுடன், நல்ல ஓய்வு எடுக்கவேண்டும்.

திரவ உணவுகளை அதிகமாக உட்கொள்வது நல்லது. எனினும், இந்தக் குணங்குறிகள் தீவிரமாகும் பட்சத்தில் வைத்திய சிகிச்சை பெறுவது அவசியம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments