கடந்த 2014ஆம் ஆண்டு இஸ்ரேல் பயங்கர வாதிகள் நடத்திய தாக்குதல்களில் காஸாவி லுள்ள பெரும்பாலான பள்ளிக்கூடங்கள் சேதம் அடைந்தன இந்த நிலையில் அவற்றை மறுசீரமைப்பதற்கு உலக நாடுகளிடம் ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி ஸ்தாபனம் [UNRWA] அழைப்பு விடுத்துள்ளது
இதனிடையே 43 பள்ளிக்கூடங்களின் மறுசீரமைப்பு பணிகளுக்காக 4.6 மில்லியன் அமெரிக் டொலர்களை கத்தாரின் அல்- பாக்ஹோஉர அறக்கட்டளை நிலையம் வழங்கியுள்ளது.
மேலும் காஸா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூறு பேர்களின் கல்விக்கான உதவித்தொகையையும் கத்தார் அளித்துள்ளது.
மேலும் கடந்த மாதத்தில் மட்டும் கத்தார் நாடு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவில் புதிதாக 1060 வீடுகளை கட்டியும், சேதமைடந்த வீடுகளை மறுசீரமைத்தும் கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments