அடுத்த 100 ஆண்டுகளில் மனிதர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும் என அறிவியல் ஆய்வாளர்கள் சுவாரசிய தகவல்களை வெளியிட்டுள்ளனர்.அடுத்த 100 ஆண்டுகளில் நமது வாழ்க்கை முறை முற்றிலும் மாறும் என தெரிவித்துள்ள அறிவியல் ஆய்வாளர்கள், நமது குடியிருப்புகளும், உணவும், தினசரி வாழ்க்கை முறையிலும் மாற்றம் ஏற்படும் என்றுள்ளனர்.
கடலுக்கடியில் குடியிருப்புகள் அமையலாம் என தெரிவித்துள்ள ஆய்வாளர்கள், வருங்காலங்களில் ஜனநெருக்கடியில் இருந்து தப்பிக்க இதுவே முறை எனவும் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவின் லண்டன் போன்ற பெருநகரங்களில் உலக மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப ஜனத்தொகை அதிகரிக்கலாம்.
அதுபோன்ற காலகட்டங்களில் பொதுமக்கள் குடியிருப்பு சிக்கலாக மாறும் என கூறும் ஆய்வாளர்கள் இதுபோன்ற திட்டங்கள் எதிர்காலத்தில் பயனைத் தரலாம் என்றுள்ளனர்.





0 Comments