Subscribe Us

கம்பளையில் 10 இராணுவ வீரர்களால் 7 மாத குழந்தையின் தாய் துஷ்பிரயோகம்: குழந்தை பால் கேட்கும் நேரத்தில் கொடூரம்

கம்பளை – சிங்கபிடிய பிரதேசத்தில் 7 மாத குழந்தையின் தாயை கெடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக  நபர்கள் 10 பேர், அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கம்பளை நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

குழந்தை பால் கேட்டு அழும் போது குறித்த சந்தேக நபர்கள் இந்த கொடூரத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர்கள் சிங்கப்பிடிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் ஆகும்.

சந்தேக நபர்களில் 9 பேர் திருமணமானவர்கள்.

குறித்த பெண்ணின் கணவர் இராணுவத்தில் சேவையில் ஈடுபட்டுள்ள ஊனமுற்றவர் என தெரியவந்துள்ளது.

கணவர் வீட்டில் இல்லாத வேலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Post a Comment

0 Comments