நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டின் அடிப்படையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரருக்கு ஏழு வருடங்கள் சிறைத்தண்டனை விதிப்பதற்கும் சட்டத்தில் இடமிருப்பதாக சட்டவல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடயின் மனைவியைத் தூற்றிய மேற்படி வழக்கு விசாரணைகளின் தன்மையின்படி, 2004வது இலக்க 04வது ஷரத்தின் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டத்தின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


0 Comments