ஹோமாகம நீதவான் நீதிமன்றில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், ஊடகவியலாளரின் மனைவி சந்த்யா எக்னலிகொடவை திட்டி அச்சுறுத்தியதாக தெரிவிக்கும் பொது பல சேனாவின் செயலாளர் கலபொடஅத்தே ஞானசாரவை கைது செய்து நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தின்போது, சந்யா எக்னலிகொடவை திட்டிய ஞானசார தேரர் அவ்விடத்திலிருந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றதோடு, எக்னலிகொட சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களால் இது குறித்து நீதவானிடம் முறையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக்கொண்டிருக்கையில், நீதிமன்றத்தை அவமதித்ததாகத் தெரிவித்த ஹோமகம நீதவான் ரங்க திஸாநாயக்க ஞானசாரவை கைது செய்வதற்கான பிடியாணையை வழங்கினார்.
0 Comments