இது இன்று கட்டாாில் இடம் பெற்ற உண்மை சம்பவம்.
கட்டாாின் அல்-கூா் பிரதேசத்தில் வீதியில் வீசப்பட்ட சிசு
இன்று அதிகாலை கட்டாாின் அல்-கூா் பிரதேசத்தில் பிரதான பாதைக்கு அருகாமையில் அமைந்துள்ள தய்க்கா பள்ளி வாயலின் முன் பகுதியில் வைத்து இனம் தொியாத நபர்களால் பிறந்தே 4 மாதம் ஆன சிசு ஒன்று கைவிடப்பட்டு இருப்பதாக தய்க்கா பள்ளியில் பணி புாியும் மௌலவி ஒருவா் அல் கூா் பொலிஸ்ஸாருக்கு தகவல் தொிவித்தாா்.
அதன் பின்னா் குறித்த இடத்திற்கு விரைந்து வந்த அல்-கூா் பொலிஸா் அங்குள்ள மக்களை விசாரனை செய்த வேளை குறித்த அந்த சிசுவானது அதிகாலை அளவில் தய்க்கா பள்ளி வாயலின் முன் பகுதியில் இருந்ததாகவும் இதை யாா் கொண்டு வைத்து என்று நாங்கள் யாரும் அாிய வில்லை என்றும் குறித்த பகுதியில் வசிக்கும் மக்கள் தொிவித்தனா்.
இதனை தொடா்ந்து பொலிஸாா் குறித்த அந்த சிசுவை அல்-தக்கிரா HAMEED அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளாா்கள்.
இதை தொடா்ந்து அல்-கூா் பொலிஸாா் கூருகையில் இந்த சிசு யாருடையது என்பது தொடா்பாக நாங்கள் விசாரிக்க இருப்பதாகவும் இந்த சம்பவத்தில் ஈடு பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை வழங்கப்படும் என்றனர்.
கற்பிட்டியின் குரல் செய்திகளுக்காக கட்டாாில் இருந்து சேகு அப்துல் ஹஸன் முசலி


0 Comments