கைது செய்யப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நான்கு பேர், கொழும்பு விளக்கமறியலில் ஒரே சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவருடன் கைதான ஐந்தாவது நபரான கவிஷ் திஸாநாயக்க, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சீ.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பல்வேறு மோசடிகள் தொடர்பில் யோசித்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐந்து பேர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் எதிர்வரும் 11ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments