இன மற்றும் மத ரீதியாக பிரிவடைந்திருந்தால், முன்னேறிச் செல்லும் உலகத்துடன் பயணிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
உலகம் வேகமாக முன்னேறிச் செல்கிறது.
இந்த நிலையில் இன மத ரீதியாக நாட்டில் குழுக்கள் உருவாகுமாக இருந்தால், உலகத்துடன் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
எனவே அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேநேரம், ஆட்சியாளர்கள் யாரும் மோசடிக்காரர்களாக இருக்கக்கூடாது.


0 Comments