Subscribe Us

header ads

மகளுக்கு நீச்சல் கற்றுத் தரும் மார்க் ஜூக்கர்பெர்க்


தன் மகள் மேக்சின் முதல் புகைப்படத்தை பதிவிட்டு அண்மையில் பேஸ்புக்கையே கலக்கிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தற்போது மகளுக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கவும் தொடங்கி விட்டார்.

இந்த பயிற்சியின் போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை "மேக்சிற்கு இதுதான் முதல் நீச்சல். இதை அவள் மிகவும் விரும்பினாள்" என்ற குறிப்புடன் பேஸ்புக்கில் பதிவிட்டார். இதை மார்க்கைப் பின் தொடரும் 4.8 கோடி பேரில் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

மார்க் படிக்கிறாரோ இல்லையோ புகைப்படத்திற்கு கீழே சோ நைஸ், சோ க்யூட் என்று கருத்துக்களையும் பலர் பதிவிட்டும் வருகின்றனர்.


Post a Comment

0 Comments