Subscribe Us

header ads

ஓரினச் சேர்க்கைப் பெண்கள் பொலிஸாரால் கைது

நாட்டில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் பெண்கள் மீது பொலிஸார் கடும் நடவடிக்கையெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவிசாவளை பகுதியில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டதையடுத்தே, கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
குறித்த பெண்கள் இருவரும் ஓரினச்சேர்க்கையாளர்கள் என்று, முச்சக்கரவண்டி சாரதியொருவரால் வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து, பஸ் தரிப்பிடத்தில் நின்றுக்கொண்டிருந்த பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டு தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் ஓரினச்சேர்க்கையாளர்களின் நிலைப்பாடு குறித்து, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஆலோசனைக் குழுக்கள் போன்ற அமைப்புக்களால் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
ஓரினச்சேர்க்கையாளர்களின் செயற்பாடுகளை தடுப்பதற்கு இலங்கையில் போதுமான விதிகள் இருப்பதாகவும் அதையும் மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று இருப்பதாகவும் பொலிஸ் பிரிவின் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments