Subscribe Us

இலங்கையில் சுற்றுலா வீசாவில் வந்து சட்டவிரோத சிறுநீரக விற்பனை.

இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட சட்டவிரோத சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சர்வதேச சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் இலங்கையில் சட்டவிரோதமாக இடம்பெற்று வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிறுநீரக உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையுடன் தொடர்புடைய பலரை தெலுங்கானா மாநில அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சுற்றுலா வீசாவின் ஊடாக சிறுநீரகங்களை வழங்கும் நபர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்து சட்டவிரோதமான முறையில் சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.

சத்திர சிகிச்சைக்காக 27 முதல் 30 லட்சம் இந்திய ரூபா பணம் அறவீடு செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments