Subscribe Us

தெமட்டகொட வாகன விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் போதைப்பொருள் மீட்பு

தெமட்டகொட வாகன விபத்தில் உயிரிழந்த பெண்ணின் உடலில் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பேஸ்லைன் வீதியின் மஞ்சள் கடவையில் 47 வயதான பெண் ஒருவரும் 10 அவரது மகளும் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த பெண்ணின் மார்பு கச்சையிலிருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலை பொலிஸார் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

வாகன விபத்தினை மேற்கொண்டதாக குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை மாணவர் ஒருவரும் அவரது தாயும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments