Subscribe Us

header ads

அன்றாடம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

நாம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் அதிக கலோரிகள் இன்றி உடலுக்கு ஆரோக்கியம் தருபவைகளாக இருக்க வேண்டும். 
ஆரோக்கியம் மட்டுமின்றி ஆற்றம் தரும் உணவுகளை அன்றாடம் சாப்பிடவேண்டும், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

பெர்ரி:
உடலில் ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பெர்ரி பழத்தில், நார்ச்சத்து நிறைந்துள்ளது, ஆன்டி ஆக்ஸிடண்ட், ஆன்ந்தோசயனின் உள்ளதால் கூர்மையான நினைவாற்றலை தரும்.
மேலும், இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையை குறைக்க உதவுவதால், டயட்டில் இருப்பவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம், 1 கப் பெர்ரி பழத்தில் 8 கிராம் நார்ச்சத்து உள்ளது.
முட்டை:
முட்டையின் மஞ்சள் கருவில் lutein மற்றும் zeaxanthin ஆகிய இரண்டு மூலக்கூறுகள் உள்ளன. இவை இரண்டும் கண்களின் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. முட்டையில் அதிக அளவில் புரோட்டின் உள்ளது.
மேலும் காலை உணவாக முட்டை டோஸ்ட் சாப்பிடுங்கள், மதிய உணவினை அளவாக எடுத்துக்கொள்ளுங்கள். இவ்வாறு செய்துவந்தால், உங்கள் உடலில் உள்ள கொழுப்பு குறைவதை நீங்கள் உணர்வீர்கள்.
பீன்ஸ்:
பீன்ஸில் இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் பெண்கள் இதனை அன்றாடம் சாப்பிட வேண்டும். இதில் உள்ள கனிமச்சத்துக்கள் ஆக்சிஜனை நுரையீரல்களிலிருந்து உடலில் உள்ள செல்களுக்கு செல்ல பயன்படுகிறது.
விட்டமின் சி சத்து மற்றும் சமையல் செய்யப்பட்ட அரை கப் பீன்ஸில் 7 கிராம் நார்ச்சத்து உள்ளது, இவை இரத்த கொழுப்பின் அளவை குறைக்கிறது.
நட்ஸ்:
புரதம், நார்ச்சத்து, விட்டமின்கள்,தாதுப் பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் உள்ளதால் இதயநோய், புற்று நோய் மற்றும் சுவாச நோய் பிரச்சனைகள் போன்றவற்றிக்கு தீர்வு தருகிறது.
ப்ராக்கோலி:
சரும நோய்களை குணப்படுத்துவது, மன நிலையை சரிசெய்வது, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக்குவது என பல வழிகளில் உடல்நலத்திற்கு நன்மை விளைவிக்கிறது.
செரிமானப் பாதைகளை நன்றாகச் சுத்தப்படுத்துவதில் ப்ராக்கோலி பெரும் பங்கு வகிக்கிறது. இதற்கு ப்ராக்கோலியில் நோய் எதிர்ப்பொருள் அதிகம் இருப்பதும் ஒரு காரணமாகும். மற்ற காய்கறிகளை ஒப்பிடும் போது ப்ராக்கோலியில் கால்சியம் சத்து அதிகம் காணப்படுகிறது.
பசலைக்கீரை:
ரத்தத்தின் சிவப்பு அணுக்கள், ஹீமோகுளோபின் ஆகியவை அதிகமாக உற்பத்தியாக உதவுகிறது. ஹீமோகுளோபின் ரத்தத்தில் ஆக்ஸிஜனை ஏற்றிச் சென்று உடலின் செல்களுக்கு தந்து அங்கிருந்து கரியமிலவாயுவை வெளியேற்றுகிறது. இதனால் ரத்தம் சுத்தமாகி உடலில் பாக்டீரியா தாக்காமல் தடுக்கிறது.
இக்கீரையில் இருக்கும் பொட்டாசியம் நரம்பு மண்டலத்துக்கு வலுவூட்டுகிறது. ரத்த அழுத்தம் சீராக இருக்கவும் பயன்படுகிறது. இதிலுள்ள விட்டமின் ஏ பார்வைக் கோளாறை தடுப்பதோடு சோர்வை நீக்கி, ரத்த விருத்திக்கும் உதவுகிறது.
ஒரு கப் பசலைக்கீரையில், கலோரி 40, கொழுப்பு 0, சோடியம் 80 மில்லிகிராம், விட்டமின் ஏ விட்டமின் சி 28 மி.கிராம்,ஃபோலாசின் 200 மி.கிராம், கால்சியம் 100 மி.கிராம், பொட்டாசியம் 560 மி.கிராம் உள்ளது.

Post a Comment

0 Comments