முஸ்லிம் காங்கிரஸ் அஸ்ரப் அவர்களின் பயணத்தில் இருந்து விலகி உரிமையை பெற்றுக்கொடுக்காத காரணத்தினால் கட்சி தொடங்கினார்களாம் , அமைச்சு பதவிக்களுக்கா மாறியவர்கள் , மர்ஹும் அஸ்ரப் பற்றி பேச எந்த தகுதியும் இல்லை இவருக்கு அந்த மாமனிதர் முஸ்லிம்களை ஒற்றுமை படுத்த கடுமையான பிரயத்தனம் எடுத்த போது அந்த தலைவருக்கு எதிராக ஒரு இணைப்பாளர் பதவி என்ற எலும்புத்துண்டுக்காக மர்ஹும் அஸ்ரப் மறையும் வரை பேரினவாதிகளுக்கும் சுமதி பாலாவுக்கும் கூஜா தூக்கினார் . அந்த தலைவரும் முஸ்லிம்களுக்கு உரிமையை பெற்றுகொடுக்கவில்லை என்பதாலா கூஜா தூக்கினார் இதில் இருந்து விளங்க வில்லையா இவருடைய சுயநல சிந்தனை ?
நீங்கள் கட்சி தொடங்கி முஸ்லிம்களுக்கு பெற்றுகொடுத்த உரிமைதான் என்ன , குறைந்த பட்சம் சொந்த மாவட்ட மக்களை மீள் குடியேற்ற அமைச்சராகவும் கடந்த அரசின் செள்ளபில்லையாகவும் இருந்தும் அந்த மக்களை மீள் குடியமர்த்தி உள்ளீர்களா செய்ய முடியவில்லை , அந்த அகதி மக்களை அரபிகளிடம் காட்டி ஒரு சில வீடுகள் உங்களுடைய மனைவியின் பெயரில் உள்ள மெகா Construction மற்றும் உறவினரின் பெயரில் உள்ள வாஹிட் Construction போன்ற கம்பனிகளை பயன்படுத்தி 60% இலாபத்தில் வீடு கட்டி கொடுத்ததும் வடக்கின் வசந்தம் மூலம் அன்பு நண்பர் பசிலுடன் சேர்ந்து ஒரு சில வீதிகள் வியாபாரம் நோக்கில் செய்ததை விட வேறு என்ன செய்துள்ளீர்கள் .
அழுத்தகம எரிந்தபோது , களால் பிரச்சினை வந்தபோது எல்லாம் எங்கே போனது உங்களது வீரம் ,மகிந்தவோடு இன்றும் கள்ள உறவில் இருக்கிறீர்கள் சந்தர்ப்பம் பார்த்து கொண்டு அவரை ஆட்சியில் அமர்த்த ,அதற்க்கான வேலை திட்டங்களையும் நடைமுறைபடுத்தி கொண்டு இருக்கிறீகள் கச்சிதமாக அதனால் பேசவேண்டிய இடங்களில் பேசாமல் நேற்று இந்த அரசாங்கத்தை விட்டு பாயவும் தயார் என்று நேற்று வீர வசம் பேசினீர்கள் உண்மையில் உங்களால் அமைச்சு இல்லாமல் ஒரு நாள் தானும் கட்சி நடத்த முடியாது உங்களை போன்று பதவிக்கான கூட்டமே உன்களை சூழ்ந்து இருப்பதும்,
விடுதலை புலிகளை அழிக்க துணை நின்றதாக இன்று வீராப்பு பேசுகிறீர்கள் ,பிரபாகரன் மரணிக்கும் வரை ஒரு வார்த்தை தானும் பேசாத நீங்கள் வடக்கு புலிகளின் கட்டளை தளபதிகள் சொன்னதை கிளிப்பிள்ளை போன்று கேட்டு செயற்பட்ட நீங்கள் பிரபாகரன் மரணித்த அன்றுதான் கலாதரி ஹோட்டலில் முதல் முறையாக பிரபாகரன் பற்றி பேசினீர்கள் என்ற வரலாறு மக்களுக்கு தெரியும் .
வில்பத்து என்கிற நாடகத்தை நடத்தி கொண்டு இருக்கும் நீங்கள் முஸ்லிம்களின் உரிமைக்காக போராடியதாக வீராப்பு பேசுகிறீர்கள் தேரரின் விவாதத்தின் மூலம் அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுகொடுத்து விட்டீர்களா ?
சத்தியம் குர் ஆனில் பண்ணுவது கூடாது . இஸ்லாத்தை காப்பதற்காக பண்ணவில்லை என்று சொல்லும் நீங்கள் பல பொய் சத்தியங்கள் காலத்துக்கு வாசிக்கு ஏற்றவகையில் கடந்த காலத்தில் பண்ணிய நீங்கள் குறைந்தது நீங்கள் உண்மையின் பால் இருந்து இருந்தால் அல்லாஹ் மீது ஆணையாக என்றாவது சொல்லி முற்றுப்புள்ளி வைத்திருக்கலாம் அல்லவா ,
அன்று முதல் சபாநாயகர் தெரிவிலையே பணத்துக்கு சமுகத்தை காட்டி கொடுத்த நீங்கள், அமைச்சு பதவிக்கும் பணதுக்குமாக கட்சி தொடங்கி விட்டு முஸ்லிம் காங்கிரஸ் மீது குற்றம் சாட்ட எந்த அருகதையும் இல்லை , பல பொய்களை நிஜம்போல் தமிழ்பட ஹீரோக்கள காட்டுவது போல் தமிழ் படபாணியில் இந்த சமுகத்தை தன் பக்கம் வசபடுத்தலாம் என பகல் கனவு காண்கிறீர்கள் ..பொய் ஒருநாளும் வெற்றி பெறாது . வேஷம் ஒருநாள் கிழிந்தே தீரும்
-Neethi-

0 Comments