பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் என்னால் ஆன அனைத்து உதவிகளையும் முடியுமான வரை செய்து கொடுப்பதாகவும்,எதிர்வரும் காலத்தில் வடமேல் மாகாண கல்வி அமைச்சரை இப்பாடசாலைக்கு அழைத்து வந்து பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்திக்கவுள்ளதாகவும் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.ரீ.தாஹிர் தெரிவித்தார்.
புத்தளம் மணல்குன்று அல்-அஷ்ராக் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வில் அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மாகாண சபை உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.
பாடசாலை அதிபர் எம்.றாசிக் தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் மேலும் அவர் பேசுகையில் –
இந்த பாடசாலையின் முன்னாள் அதிபரும் இந்த பாடசாலையின் முன்னேற்றம் தொடர்பில் அதிகமான கவனத்தை செலுத்தியமை தொடர்பில் குறிப்பிட வேண்டும்.இந்த பாடசாழலையின் கல்வி உள்ளிட் ஏனைய துறைகளில் தற்போதுள்ள அதிபர் அவர்களும் பெரம் அர்வம் கொண்டுள்ளார்.
தற்போது அதிபரினால் முன் வைக்கப்பட்டுள்ள கோறிக்கைகளில் ஏதாவது ஒன்றை எனது மாகாண நிதி ஒதுக்கீட்டில் இருந்து செய்துதரவுள்ளேன் என்றும் கூறினார்.
இந்த நிகழ்வில் புத்தளம் நகர சபையின் முன்னாள் பிரதி தலைவரும்,ஜக்கிய தேசிய கட்சியின் அமைப்பாளருமான ஏ.ஓ.அலிகான் ,பாடசாலைகளின் அதிபர்கள், புத்தளம் கெயார் என் செயார் அமைப்பின் பிரதி நிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
0 Comments