சிலாபம் - பல்லம – வில்பத பகுதியில் 17 வயது பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் ஆரம்ப மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த பெண் சிலாபம் - பல்லம பிரதேசத்தின் வீடொன்றில் அவரது கணவர் என தெரிவிக்கப்படும் நபருடன் இரண்டு வருடங்களாக வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில குறித்த பெண் நேற்று அந்த வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக காவற்துறையினர் எமது செய்திப்பிரிவுக்கு தெரிவித்திருந்தனர்.


0 Comments