Subscribe Us

header ads

பதவி பெற பொன்சேகா தயாரில்லை?


நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொள்வதற்கு தமது கணவர் தயார் நிலையில் இல்லை என்று, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மறைந்த அமைச்சர் எம.கே.ஏ.டீ.எஸ். குணவர்தனவின் நாடாளுமன்ற பதவி வெற்றிடத்துக்கான உறுப்பினர் எதிர்வரும் ஓரிரு தினங்களின் நிரப்பப்படவுள்ளது.

அமைச்சர் கபீர் ஹசீம் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக ஏற்கனவே பலரின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், இந்த பதவிக்கு பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது தொடர்பில் எமது செய்திப்பிரிவு அனோமா பொன்சேகாவை தொடர்பு கொண்டு வினவியபோது, இது குறித்து தங்களுக்கு இன்னும் அறியப்படுத்தப்படவில்லை என்று கூறினார்.

Post a Comment

0 Comments