Subscribe Us

header ads

பௌத்தன் என்ற வகையில் வெட்கப்படுகிறேன்- பிரதமர் (படங்கள் இணைப்பு)


கலகொடஹெத்தே ஞானசார தேரரை நீதிமன்றத்திற்கு முன்னிலைப்படுத்திய போது நீதிமன்ற வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய தேரர்கள் தொடர்பில் மல்வத்து பீடாதிபதி மற்றும் கோட்டையின் பிடாதிபதிக்கும் அறிக்கை ஒன்றை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க காவற்துறையினருக்கு அறிவித்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தின் கருத்து தெரிவித்த பிரதமர் , நீதிமன்றத்தை மதித்து நடப்பது நமது அனைவரது கடமை என அவர் தெரிவித்திருந்தார்.

ஹோமாக நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் தேரர்களின் குழுவொன்று நடந்து கொண்ட செயற்பாடுகள் தொடர்பாக பௌத்தன் என்ற முறையில் வெட்கப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்திருந்தார்.

பௌத்த தேரர்கள் அவர்களது ஒழுக்காற்று நடவடிக்கைகளின் கீழ் செயற்பட வேண்டும் என்று இதன் போது அவர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல் , நாட்டின் சட்டத்திட்கு அனைவரும் பணிந்து நடக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

 



Post a Comment

0 Comments