நியூசிலாந்தில் தொழில் வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 75 லட்ச ரூபாவினை மோசடி செய்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பிரதி அமைச்சர் விக்டர் என்டனிக்கு எதிராக காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
குறித்த நபர்களினால் காவற்துறை மா அதிபருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைவாகவே விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் .
கடந்த 2014 ஆம் வருடம் பிரதி அமைச்சரின் தனியார் செயலாளரினால் வாக்குறுதியளிக்கப்பட்டு பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும், அதற்கமைவாக தமக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப் பெறவில்லை எனவும் முறையிட்டுள்ளனர் .
18 பேர்களிடம் இருந்து 3 லட்சத்து 46 ஆயிரம் ரூபாவினை பெற்றுக்கொண்டுள்ளதுடன், ஒருவரிடம் இருந்து மாத்திரம் 13 லட்சத்து 60,000 ஆயிரம் பணத் தொகை பெற்றுக் கொள்ளப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார் .
குறித்த பணத் தொகையினை பெற்றுக் கொண்டவர் ஆனமடுவ பிரதேசத்தினை சேர்ந்தவர், தொழில் வாய்பினை பெற்றுக் கொள்வதற்காக பணத் தொகையினை கொடுத்தவர்கள் புத்தளம் ,சிலாபம் கற்பிட்டி மற்றும் களுத்துறை பிரதேசத்தினை சேர்ந்தவர்களாவர்.


0 Comments