அண்மையில் இலங்கையில் கைப்பற்றப்பட்ட பாரிய அளவிலான ஹெரோயின் போதைப்பொருட்களாக கருதப்படும் போதைப்பொருள் தொகையொன்றுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து 20 கிலோ 876 கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் அம்பலங்கொட – மாதம்பாகம பிரதேசத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொட காவற்துறைக்கு கிடைத்த தகவலுக்கு அமையவே நேற்று மாலை குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.
மேலும், சந்தேச நபரிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த போதைப்பொருட்களை 6 கோடி ரூபாய்களுக்கு விற்பனை செய்ய தயார் நிலையில் வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
34 வயதுடைய குறித்த நபர் அம்பலங்கொட பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் இன்று பலபிடிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
0 Comments