Subscribe Us

header ads

Zahirians’12 இன் தொடரும் பயணம்....


அல்ஹம்துலில்லாஹ் வெற்றிகரமாக தனது மூன்றாவது அத்தியாயத்தை ஆரம்பித்தது Zahirians’12 குடுப்பம். இந்த வருடத்திற்கான வருடாந்த பொது கூட்டம் சுமார் 50 பேருடன் (2015.12.25) புத்தளம் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. 

இரவு 7 மணியளவில் கிறாத்துடன் ஆரம்பிக்கபட்ட நிகழ்வு இரவு 9.30 மணி வரை நீண்டது. 

நிகழ்வின் பிரதம அதிதியாக பிரபல உளவள ஆலோசாகர் மற்றும் கொழும்பு Amazon college இன் ஸ்தாபாகர் சகோ.இல்ஹாம் மரிக்கார் அவர்கள் கலந்து சிறப்பித்தார். 

இரண்டு அங்கங்களாக நடைபெற்ற நிகழ்வின் முதல் பாதியில் வரவேற்பு உரையை தொடர்ந்து நடப்பு வருட தலைவர் சகோ.அப்துல் பாதிர் அவர்களின் தலைமை உரை இடம்பெற்றது. 

அதிதி உரையில் இளைஞர் குழுக்களின் வெற்றிக்கு தேவையான திட்டமிடல் மற்றும் சமூகத்திற்கு அவர்களால் ஆக வேண்டிய கடமைகள் எனும் கருப்பொருளில் சிறந்ததொரு உரையை இல்ஹாம் மரிக்கார் அவர்கள் வழங்கினார். 

இன்னும் பல நிகழ்வுகளை உள்ளடக்கியதாக முதல் பாதி அமைந்தது. நிகழ்வின் முக்கிய அங்கமான அடுத்த வருடத்திற்கான புதிய தலைவர் உட்பட ஒன்பது பேர் அடங்கலான நிர்வாக குழுவை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நிகழ்வின் இரண்டாம் பாதியில் இடம்பெற்றது. 

சகோ.சராபாத் தலைமையில் நடைபெற்ற தேர்தலில் நிகழ்வில் பங்குகொண்ட 50 பேரும் மற்றும் வெளிநாடுகளில், வெளிஊர்களில் உள்ள நண்பர்கள் சுமார் 30 பேரும் வாக்களித்திருந்தனர். 

அதிகபடியான வாக்குகளை பெற்று சகோ.நசீப் அவர்கள் அடுத்த வருடத்திற்கான Zahirians’12 நிர்வாக குழு தலைவாராக தெரிவுசெய்யப்பட்டார்.

மேலும் 9 பேர்கொண்ட நிர்வாக குழுவும் தெரிவுசெய்யபட்டது. பொறுப்புகள் அனைத்தும் புதிய நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது. 

இறுதியாக சலாவாத்துடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது. 

நிகழ்வில் கலந்துகொண்ட பிரதம அதிதி இல்ஹாம் மரிக்கருக்கும், கலந்துகொண்ட அனைத்து நண்பர்களுக்கும், மேலும் வெளிநாடுகளில் இருந்து தமது பங்களிப்புகளை வழங்கிய நண்பர்களுக்கும் நன்றியை தெரிவிக்கும் அதே நேரத்தில் நிகழ்வுக்கு தேவையான projector ஐ வழங்கிய புத்தளம் ISoft கல்லூரியின் ஸ்தபாகர் சகோ.அப்ராஸ் அவர்களுக்கும் அதற்கு உதவியாய் இருந்த கல்லூரி மாணவன் சகோ.சிப்ரி அவர்களுக்கும் விசேட நன்றிகளை தெரிவிக்கின்றோம்.
புதிய நிர்வாகம் :
தலைவர் : A.W Naseef செயலாளர் : J.M.M Sajjadh Marikkar உப தலைவர் : S.M Faalih உப செயலாளர் : L.M Zaky அமைப்பாளர் : M.N Abdhul Fathir கணக்காளர் : R.M Rishaf ஊடகம் : M.A.H.M Nafly Hussain நிர்வாக உறுப்பினர்கள் : A.J.M Azmin khan I.M Imran
Zahirians’12 Media.







Post a Comment

0 Comments