மகளிர் அரணை உருவாக்கி தேசத்தை வலுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் விழிப்புணர்வுத் திட்டம் புத்தளம் மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் இன்று முன்னெடுக்கப்பட்டது.
நியூஸ்பெஸ்ட் சக்தி சிரச ஊடக வலையமைப்பு, இலங்கை பொலிஸாருடன் இணைந்து முன்னெடுக்கும் இந்த விழிப்புணர்வுத் திட்டத்துடன் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சும் இணைந்துள்ளது.
பெண்களின் சமத்துவத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
புத்தளம் பஸ்தரிப்பிடத்தில் இன்று (14) முற்பகல் இடம்பெற்ற விழிப்புணர்வுத் திட்டத்தில் புத்தளம் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர் .
புத்தளம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிளில் இருந்தும் வருகைதந்த பெருந்திரலான பெண்கள் மிகவும் ஆர்வத்துடன் இதில் பங்கேற்றனர்
மேலும் சமூகத்தில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றுக்கான தீர்வுகள். பெண்களின் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்துவது தொடர்பில் இதன்போது ஆலோசனை வழங்கப்பட்டது
அதனை தொடர்ந்து பெண்களின் சமத்துவத்தை பிரதிபலிக்கும் பட்டிகள் அணிவிக்கப்பட்டு மகளிர் அரண் உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, புத்தளம் நகரினை அண்மித்துள்ள தில்லையடி , பாலாவி போன்ற பகுதிகளில் வீடு வீடாக சென்ற நியூஸ்பெஸ்ட் குழுவினரால் விழிப்புணர்வு கையேடுகள் விநியோகிக்கப்பட்டன.
இதேவேளை, இரத்தினபுரி பஸ் தரிப்பிடத்தில் இன்று காலை 9 மணிக்கு மகளிர் அரண் செயற்திட்டம் ஆரம்பமானது.
இரத்தினபுரி பிரதேசத்திலுள்ள மகளிர் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
-News1st-


0 Comments