(FB) முகநூல் இணையம் , இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் அத்தியாவசியமாகிவிட்ட ஓன்று என்றே சொல்லலாம்.
இதில் பல்வேறு ஆபத்துகள், தீமைகள் இருந்தாலும் பலதரப்பட்ட தகவல்களை அறிந்துக்கொள்வதற்க்கும், தங்கள் திறமையை வெளிக்கொண்டுவருவதற்கும் இஸ்லாமிய வரையறைக்குள் பெண்களின் உரிமைகளை பேசுவதற்கும் முக்கிய அம்சமாக இம்முகநூல் உள்ளது.
இம்முகநூலில் அதிகமான தமிழ் பேசும் சகோதரிகள் அங்கம் வகிக்கின்றனர். முகநூலில் இலங்கை சகோதரிகளின் FB கணக்குகள் எண்ணிலடங்காதவை. தமிழ் பேசும் அனைத்து சகோதரிகளையும் ஒன்றிணைந்த குழுமங்கள் முகநூலில் இல்லாதது வருத்தமளிக்கின்றது.
அதை நிவர்த்திசெய்யவே இக்குழுமம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
.ஒவ்வொரு இயக்கத்துக்கும், ஊர்களுக்கும் தெருவிற்க்கும், விளையாட்டு அணிக்கும் குழுக்கள் உள்ளன. பெண்களுக்கு என்று ஓன்று இதுவே முதல் முயற்சி.
இந்த “The Puttalam Time - மாதர் சங்கம்” குழுமம் ஆரம்பத்தில் சிறிதாய் இருந்தாலும் பின்னர் பிரபலம் வாய்ந்த குழுவாக மாற்றமடைந்து இணையதளங்களிள் செய்திகளை பரப்பும் குழுக்களாக அமையும் என்றாலும் மிகையாகாது.
கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் “The Puttalam Time - மாதர் சங்கம்” என்றதொரு முகநூல் குழுமம் பெண்களின் நலன்கருதி சில நோக்கங்களையும், விதிகளையும், பொறுப்புதாரிகளையும் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது . இது தொடர்பாக இக்குழுமத்தை ஆரம்பித்த சகோதரர் Mr.Abdul Wahid Mohamed Mahroof. இக்குழுவில் தன்னுடைய அறிமுகத்தில் கூறியிருப்பதாவது…
“ இந்த ஃபேஸ்புக் குழுமத்தின் நோக்கம் என்னவென்றால், ஊரில் நாம் எப்படி ஒருவரையொருவர் நேரில் சந்தித்தால் அன்யோன்யமாகவும், வயதுக்கேற்ற மரியாதையுடனும், புத்தளத்துக்குரிய உரிய நகைச்சுவை, குசும்புடனும் பேசுவோமோ அதேபோல் இயல்புடைய இலங்கை வாழ் தமிழ் பேசும் பெண்மனிகளை ஒன்று சேர்க்கும் நோக்கத்தில்தான் இந்த குழுமத்தை ஆரம்பித்துள்ளேன் .என்று கூறினார் (Public Group)
தமிழ் பேசும் பெண்கள் மட்டும் கருத்து பரிமாற இக்குழுமம் அனுமதியளித்துள்ளது .. ஆகவே அங்கத்தவர்கள் உங்களது நட்புவட்டத்தில் உள்ள தமிழ் பேசும் பெண்களையும் இணைத்துக்கொண்டு சிறப்பிக்கவும்.
இயக்கம்,பாகுபாடுகள் இல்லாமல் சுமூகமாக இக்குழுமத்தை வழினடாத்திச்செல்ல அனைவரது ஒத்துழைப்பும் அவசியமாகும்
இக்குழு ஆரம்பித்த நாளில் இருந்து பல்வேறு பெண்களின் முக்கிய தேவைகள், பிரச்சனைகள் குறித்து பதிவேற்றப்பட்டு வருகிறது. இதனால் இக்குழுமம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது காலத்துக்கு முகநூலில் உள்ள பெண்கள் மத்தியில் நல்லதொரு வரவேற்பைப் பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி இக்குழுவில் 91 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். இதில் எழுதாளர்கள், இணையதள ஆசிரியர்கள், சமுக ஆர்வலர்கள், என பல தரப்பட்ட பெண்களும் அடங்குவர்.
இக்குழுமம் இலங்கையில் முன்னேற்றப் பாதையில் இயங்குவதற்கு “The Puttalam Times - மாதர் சங்கம்” சார்பாக வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி
ஹிமாயா நவ்ஷாத்
சமூக ஆர்வலர்....
குழும முகவரி :https://www.facebook.com/groups/TPT.Womens.Association/


0 Comments