Subscribe Us

புத்தளம், தில்லையடி, சதாமியாபுரம் அல் – அக்ஸா பாலர் பாடசாலையின் கண்காட்சியும், பரிசளிப்பும் (PHOTOS)

புத்தளம், தில்லையடி, சதாமியாபுரம் அல் – அக்ஸா  பாலர் பாடசாலை மாணவமணிகளின் வருடாந்த கண்காட்சியும்,பரிசளிப்பும், கலை நிகழ்வும் இன்று பாடசாலை வளாகத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தேசமான்ய எஹியா அவர்களுக்காக அவரின் புதல்வன் அஸ்லம் அவர்களும் விசேட அதிதியாக பொறியிய லாளர் பாசில் அவர்களும் சிறப்பு அதிதிகளாக ஆசிரிய ஆலோசகர் நிஜாம் அவர்களும் கிராம அலுவலர் மிப்ராஸ் அவர்களுடன் பள்ளிவாசல் நிர்வாகிகள், சமூக நலன் விரும்பிகள், ஊர் ஜமாத்தார்கள், இளைஞர்கள்உட்பட பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.


கொட்டும் மழையிலும் சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வை இப்பாடசாலை கட்டிடத்தை அமைக்க அரும் பாடுபட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து நடாத்தி முடித்ததுடன் எல்லோர் மனதையும் ஈர்த்த கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் சிறப்பானவற்றை தெரிவு செய்து அவற்றுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி மாணவமணிகள் கெளரவிக்கப்பட்டனர். 
-S.F Manafdeen-






Post a Comment

0 Comments