சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 10 இலட்சம் , ஊர் முழுக்க அடுத்த சூப்பர் ஸ்டார் என கூவிக்கொண்டிருக்கும் நடிகர் விஜய் 15 இலட்சம் என வெள்ள நிவாரண நிதியாக தமிழ் நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ளார்கள்.
ஆனால் இலங்கை கிரிக்கட் அணி வீரர் குமார் சங்ககாரவிற்கும் தமிழக மக்களுக்கும் என்ன சம்மந்தம்?? தமிழக மக்களுக்காக 10000 டொலரை வழங்கியுள்ளார். அதே போன்று முத்தையா முரளிதரன் ஒரு கோடி ரூபாயை வெள்ள நிவாரண நிதியாக வழங்க முன்வந்துள்ளார்.
தனது சொந்த மாநில மக்கள் வெள்ளத்தில் துன்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உதவாத இந்த நடிகர்கள் எப்போது நல்லது செய்வார்கள்? மக்களை முட்டாளாக்கும் சினிமா திரைப்படங்களை நடித்து அதில் கோடான கோடிகளை சம்பளமாக வாங்கும் இவர்களுக்கு ஏன் இந்த சிறிய மனம்?
சங்கா மற்றும் முரளிதரனுடன் – இந்த நடிகர்கள் வழங்கிய நிவாரண நிதியை ஒப்பிடும் போது தமிழ் நாட்டு மக்களை மடையர்களாக்கி வைத்திருக்கும் இவர்களின் சந்தர்ப்ப அரசியல் பிழைப்பு தெரியவருகின்றது.
மக்களின் பணத்தில் வாழும் இந்த நடிகர்கள் தங்களது பணத்தை மக்களுக்காக செலவு செய்ய எவ்வளவோ யோசிக்கிறார்கள்!!! தமிழ் நாட்டில் சினிமாத் துறையில் உள்ள நடிககை நடிகர்கள் தாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10வீதத்தை வெள்ள நிவாரண நிதியாக வழங்குவார்கள் என்றாலே பாதி மக்களின் கஷ்டம் தீர்ந்து விடும்.
வீட்டை தின்பவனுக்கு கதவு ஒரு பப்படமாமம். அது போல கோடான கோடிகளில் சம்பளம் பெறும் இவர்களுக்கு இந்த நிவாரண நிதி ஒரு தூசுக்குச் சமம். எவ்வளவுதான் சொன்னாலும் இந்த கூத்தாடிகளுக்கு பின்னாலே எதிர்காலத்தை கட்டமைக்க வேண்டிய இளைஞர்கள் அணிதிரள்வதுதான் றொம்ப வேதனையாக இருக்கின்றது.
நாடு கடந்து தமிழ் நாட்டு மக்களுக்கு உதவிய குமார் சங்ககார மற்றும் முத்தையா முரளிதரணை நாமும் மனதார வாழ்த்துவோம்.


0 Comments