அன்றாடம் வாகனங்களை செலுத்தும் நாம் நம்
தவறினாலோ அல்லது மற்றவர்களின் தவறினாலோ போக்குவரத்து பொலிசாரின் தண்டப்பணம்
அறவிடுகின்ற சந்தர்பங்கள் நிறையவே ஏற்படுவதுண்டு.
அவ்வாறான தவறுகள் ஏற்படும் சமயத்தில் போக்குவரத்து
பொலிசாரினால் நீதிமன்றில் வழக்கு போடுவதற்கு பதிலாக தண்டப்பணத்தை செலுத்துமாறு
வாகனத்தை ஓட்டுவதற்கான சாரதி அனுமதி பத்திரத்தை வாங்கிவிட்டு தற்காலிக சாரதி
அனுமதி பத்திரம் ஒன்று வழங்கப்படும்.
இதில் விடயம் என்னவென்றால் அடுத்து நீதிமன்றில்
போக்குவரத்து வழக்குகளை விசாரணை தினம் எதுவோ அதுவரை இத்தற்காலிக அனுமதி பத்திரத்தை
பயன் படுத்தி வாகனம் ஓட்டமுடியும் என்பதற்காக நீதிமன்ற திகதி வரை அத்தற்காலிக
அனுமதி வழங்கப்படுவதுண்டு.
இருப்பினும் நீதிமன்ற திகதி எவ்வாறு அமைந்தாலும்
குற்றம் இடம்பெற்ற நாளிலிருந்து பதினான்கு நாட்களுக்குள் தண்டபணத்தை தபாலகங்களில்
செலுத்திகொள்ளல் அவசியம். குற்றம் இடம்பெற்ற நாளும் ஒரு நாளாக கருதப்படுவதால்
இன்னும் பதின்மூன்று நாட்களே எஞ்சி உள்ளதை மனதில்கொள்ள வேண்டும்.
எனினும் நம்மில் அநேகமான சாரதிகள் தற்காலிக
சாரதி பத்திரத்தில் உள்ள நீதிமன்ற திகதியைப்பார்த்துவிட்டு அதுவரை தண்டப்பணம்
செலுத்தாமல் பொடுபோக்காக இருப்பதால் தண்டப்பணம் செலுத்தவேண்டிய காலஎல்லை
தாண்டிவிடுவதால் தபாலகங்களில் பாரமேற்க முடிவதில்லை.
எனவே சாரதிகள் நீதிமன்ற திகதி வரை தற்காலிக
அனுமதி பத்திரத்தை பயன் படுத்தாமல் மறுபக்கத்தில் சொல்லப்பட்டுள்ள அறிவித்தலுக்கு
அமைய காலதாமதமின்றி தண்டபணத்தை செலுத்துவதின் மூலம் வீணான சிரமத்தை தவிர்ப்பதோடு
நீதிமன்ற படிக்கட்டுகளை ஏறும் நிலையும் ஏற்படாது என்பதை தெரிவித்துகொள்கின்றேன்....
உதாரணமாக கிழே படத்தில் உள்ள தற்காலிக
அனுமதிப்பத்திரத்தில் குற்றம் இழைக்கப்பட்ட திகதி 2015.11.01 ஆகவும் நீதிமன்ற திகதி 2015.11.17 ஆகவும் உள்ளதால்
இப்பத்திரத்தை பயன்படுத்தி வாகனம் செலுத்தக்கூடிய திகதியாக 2015.11.17 பதியப்பட்டுள்ளது
ஆனால் இங்கு 2015.11.14 திகதியின் பின்னர் தண்டபணத்தை தபாலகங்களில் செலுத்த
முடியாது.
எனவே
இச்சாரதி நாட்களை சரியாக கணக்கெடுக்காவிட்டால் நீதிமன்றில்
சீரழிவதோடு பெரும்தொகையான தண்டமும் செலுத்த நேரிடும்..
- மக்கள் நலன் விரும்பும் மணாப்தீன் .


0 Comments