Subscribe Us

header ads

மத வெறியை கக்கும் அமெரிக்க அதிபர் வேட்பாளர்: இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க கூறியதால் பரபரப்பு...h

அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வரும் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியுள்ள கருத்து அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடைய ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து பரப்பி வருகிறார்.

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து, ‘தாங்கள் இஸ்லாமியர்கள்’ என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க வேண்டும் என கடந்த வாரம் கூறினார்.

இந்நிலையில், அண்மையில் அமெரிக்காவில் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வெள்ளை மாளிகைக்கு கோரிக்கை விடுத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜான் எர்னஸ்ட், “ இப்போது செய்ததைத்தான், டொனால்ட் தனது பிரச்சாரம் முழுவதும் செய்து வருகிறார். இதன் மூலமாக, மக்களின் பயத்தோடு விளையாடி, தனது பிரச்சாரத்திற்கு வலு சேர்த்து வருகிறார். மிகவும் கீழ்த்தரமான வழியில் அமெரிக்காவை பிரிக்க நினைக்கிறார். இது அமெரிக்காவின் இறையாண்மைக்கே எதிரானதாகும்.” என்று தெரிவித்துள்ளார். 

Post a Comment

0 Comments