பன்றிக்காயச்சல் ‘எச்.என் 1’ என்ற வைரஸ் கிருமிகளால் ஏற்படுகிறது. கடந்த 2009–ம் ஆண்டில் மெக்சிகோவில் தான் இக்காய்ச்சல் முதன் முறையாக உருவானது’. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது.
இந்த நிலையில் தற்போது ஈரானில் இந்த நோய் பரவி வருகிறது. அங்கு கெர்மான் மற்றும் சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணங்களில் பன்றிக் காய்ச்சல் நோய் பெருமளவில் தாக்கியுள்ளது.
கெர்மான் மாகாணத்தில் 600 பேர் பன்றிக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்தரிகளில் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். அவர்களில் 28 பேர் பலியாகி உள்ளனர்.
சிஸ்தான்–பலுசிஸ்தான் மாகாணத்திலும் இந்த நோய் பரவி வருகிறது. அங்கு 5 பேர் உயிரிழந்துள்ளனர். 3 வாரத்தில் மொத்தம் 33 பேர் பலியாகி உள்ளனர்.


0 Comments