Subscribe Us

header ads

உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மீழ்நிர்ணய முறையீட்டு ஆணைக்குழுவிடம் முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

FILE PICTURE
அரசாங்கத்தினால் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மீழ்நிர்ணயம்; தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற முறையீட்டு ஆணைக்குழுவிடம் நேற்று 10.12.2015 முஸ்லிம் பிரதிநிதித்துவம் தொடர்பாக மிக விரிவாக கலந்துரையாடப்பட்டது. கெளரவ வர்த்தக வாணிப அமைச்சர் அல்ஹாஜ் ரிஷாட் பதியுதீன் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் முஸ்லிம்கள் சார்பாக எம் ஐ எம் மொஹிதீன்  அவர்கள் உள்ளூராட்சி எல்லைகள் மீழ்நிர்ணயம் தொடர்பான முஸ்லிம்களின் பிரச்சனைகளை ஆதார பூர்வமாக விளக்கிக்கூறினார்.

உள்ளூர் அதிகார சபைகளின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள உள்ளூர் அதிகார சபை செயற்பாடுகளின் போது முஸ்லிம்களின் அபிலாஷைகள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்றும் முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தின்படி பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் முஸ்லிம் அங்கத்தவர்களைத் தெரிவு செய்வதற்கு நீதியானதும் நேர்மையானதுமான வாய்ப்பு முஸ்லிம்களுக்கு வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 12 முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபைகளுக்கான பொருளாதார வள ஒதுக்கீடுகளில் முஸ்லிம்களுக்குப் பாரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளதுடன் அவைகளில் பல பொருளாதார ரீதியாக உறுதியான நிலையில் காணப்படவில்லை. அக்கரைப்பற்றில் புதிய பிரதேச சபைகள் உருவாக்கப்பட்ட போது, அதிகமான இயற்கை வளங்கள் நியாயப்படி முஸ்லிம்களுக்கு சொந்தமாகவுள்ள பெரும்பகுதி வயல் நிலங்கள் ஆலையடிவேம்பு என அழைக்கப்படும் புதிய தமிழ் பிரதேச சபையில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 22,411 தமிழர்களைக் கொண்ட ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கு 37 சதுர மைல்கள் நிலப்பகுதி வழங்கப்பட்டுள்ளன. அதேசமயம் 39,223 முஸ்லிம்களைப் பெரும்பான்மை கொண்ட அக்கரைப்பற்றுப் பிரதேச சபைக்கு 20 சதுர மைல்கள் நிலப்பகுதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளன. ஆலையடிவேம்பு பிரதேச சபையின் 37 சதுர மைல் கொண்ட நிலப்பகுதியில் 25 சதுர மைல்கள் நிலப்பகுதி முஸ்லிம்களுக்குச் சொந்தமான வயல் நிலங்கள் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.

1921 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் சிங்களவர் சனத்தொகை 4மூ சதவீதமாகக் காணப்பட்டது. ஆனால் நாடு சுதந்திரமடைந்த பின்னர் அரச அனுசரணையோடு; மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களின் பின்னர் நிலைமை குறிப்பிடத்தக்களவு மாற்றமடைந்தது. 1981 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை மதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் 42மூ சதவீதம், முஸ்லிம்கள் 35மூ சதவீதம் சிங்களவர்கள் 25மூ சதவீதம் என்ற அடிப்படையில் பதிவாகியது. ஆனால் உள்ளூர் அதிகார சபைப் பட்டியலில் 25மூ சதவீத சிங்களவர்களுக்கு 17 ஆகவும் 35மூ சதவீத முஸ்லிம்களுக்கு 12 மாத்திமே வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட கட்டுக்குளம் பற்று பகுதியில், 33,100 மொத்த சனத்தெகையினரைக் கொண்ட முஸ்லிம்களுக்கு குச்சவெளி முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 27,143 மொத்த சனத்தொகையினைக் கொண்ட சிங்களவர்களுக்கு மூன்று பிரதேச சபைகள் வழங்கப்பட்டள்ளன. அவை 11,858 பேருக்காக பதவி சிரிபுர பிரதேச சபை, 7,339 பேருக்காக கோமரன் கடுவல பிரதேச சபை மற்றும் 7,946 பேருக்காக மொறவௌ பிரதேச சபை ஆகியன.

தற்போதுள்ள லகுகல பிரதேச சபையானது முன்னைய முஸ்லிம் பெரும்பான்மை பாணமப் பற்றின் ஒரு பகுதியாகும். 2012 ஆம் ஆண்டில் லகுகல பிரிவில் 8,900 ஆக இருந்த சிங்களவர்களுக்கு 368 சதுர மைல்கள் நிலப்பகுதி வழங்கப்பட்டுள்ளது. அதேNளை  34,749 பேரைக் கொண்ட முஸ்லிம் பெரும்பான்மை பொத்துவில் பிரிவுக்கு 115 சதுர மைல்கள் நிலப்பகுதி மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

1987.05.12 ஆம் மற்றும் 1992.12.01 ஆம் திகதிய அரச வர்த்தமானி அறிவித்தல்களுக்கமைவாக, அப்போதிருந்த அரசாங்கம் மக்களுடனான எவ்வித ஆலோசனைகளும் மேற்கொள்ளாமல் ஒருதலைப்பட்சமாக உள்ளூர் அதிகார சபைகளை நிறுவியிருந்தது. குறிப்பாக இந்த உப தேசிய அலகுகள் சிறுபான்மை சமூகங்களுக்கு சந்தர்ப்பமொன்றினை வழங்கிய போது, வடக்குக் கிழக்குக்கு வெளியே மூன்றில் இரண்டை விட அதிகமாக முஸ்லிம்கள் வாழ்கின்ற பகுதிகளில் உள்ளூர் அதிகார சபைகளுக்கான தமது சட்டபூர்வ பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் மறுக்கப்பட்டுள்ளது என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்தில் மொறவௌ 10,000, கோமரன்கடுவெல 7,000 மற்றும் பதவிசிரிபுர 11,000 மற்றும் அம்பாறை மாவட்டத்தில் லகுகல 6,000, பதியத்தலாவ 10,000 ஆகிய பகுதிகளில் சிங்களவர்களுக்காகவும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோரளைப்பற்று வடக்கு 10,000 மற்றும் அம்பாரை மாவட்டத்தில் காரைதீவு 9,000, முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் 8,000 மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் பச்சிலைப்பள்ளி 12,000 மற்றும் பூனகரி 15,000 ஆகிய பகுதிகளில்  தமிழர்களுக்காகவும் மிகக் குறைந்த சனத்தொகையுடன் உள்ளூர் அதிகாரசபைகள் நிறுவப்பட்டுள்ளன.
ஆனால் முஸ்லிம்களுக்காக, கொழும்பு மாவட்டத்தில் 270;;000, கம்பஹா மாவட்டத்தில் 115,000, கழுத்துறை மாவட்டத்தில் 114,000, கண்டி மாவட்டத்தில் 196,000, மாத்தளை மாவட்டத்தில் 45,000, குருணாகல் மாவட்டத்தில் 118,000, அனுராதபுரம் மாவட்டத்தில் 71,000, பொலன்னறுவை மாவட்டத்தில் 30,000, கேகாலை மாவட்டத்தில் 60,000, காலி மாவட்டத்தில் 39,000, மாத்தறை மாவட்டத்தில் 25,000 மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 15,000. இத்தகைய முஸ்லிம் பெரும்பான்மை பகுதிகளில் முஸ்லிம்களுக்கான உள்ளூர் அதிகார சபைகள் வழங்கப்படவில்லை.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் பெரும்பான்மை பிரதேச சபை பகுதிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காணி ஒதுக்கீட்டினை விட சிங்கள பெரும்பான்மை பிரதேச சபைப் பகுதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட காணி ஒதுக்கீடு 13 மடங்கை விட அதிகமாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலே காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை பகுதிகளிலும் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலே மூதூர், கிண்ணியா, தம்பலகாமம் மற்றும் குச்சவெளி பகுதிகளிலும் மிக மோசமான பாகுபாடுகள் இடம் பெற்றுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டம் 14 பிரதேச சபைகளை உள்ளடக்கியுள்ளதுடன், 2,633 சதுர மைல்கள் கொண்ட நிலப்பரப்பினையும் உள்ளடக்கியுள்ளது. இங்கு 04 முஸ்லிம் உள்ளூராட்சி அதிகார சபை பிரவுகள் காணப்படுவதுடன், நிலப்பகுதியினைப் பொறுத்தவரையில் காத்தான்குடி 3.4 சதுர கிலோ மீற்றர்கள், ஏறாவூர் நகரம் 3.89 சதுர கிலோ மீற்றர்கள், கோரளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) 6.84 சதுர கிலோ மீற்றர்கள், கோரளைப்பற்று மத்தி 6.50 சதுர கிலோ மீற்றர்கள். முஸ்லிம்களின் மொத்த நிலப்பகுதியின் விஸ்தீரணம் கிட்டத்தட்ட 20.0 சதுர கிலோ மீற்றர்களாகும். மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் சனத்தொகை கிட்டத்தட்ட 35மூ சதவீதம். ஆனால் முஸ்லிம் பிரதேச மொத்த நிலப்பகுதி 1.0மூ சதவீதத்தினை விடக் குறைவாகும்.

அரசாங்கத்தினால் உள்ளூராட்சி சபைகளின் எல்லைகள் மீழ்நிர்ணயம்; தொடர்பாக அமைக்கப்பட்டிருக்கின்ற முறையீட்டு ஆணைக்குழுத் தலைவர் கௌரவ அசோக்க பீரிஸ் அவர்கள் மேற்படி விடையங்கள் தொடர்பாக கவனம்செலுத்துவதாகவும் உயர்மட்டத்திற்கு அறிவிப்பதாகவும் தெரிவித்தார். 

AKM Siyath

Post a Comment

0 Comments